“நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல” - கே.எஸ் அழகிரி


“நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல” - கே.எஸ் அழகிரி
x
தினத்தந்தி 8 Nov 2020 2:28 PM IST (Updated: 8 Nov 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாங்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “அதிமுக - பாஜகவைப் போல, திமுக - காங்கிரஸ் அடிமை கூட்டணி அல்ல, சுதந்திரக் கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துகளை சொல்கிறோம்” என்று கூறினார்.

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தானே தவிர ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் அல்ல என்றும், 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும், ஆளுநர் அல்ல என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Next Story