அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி


அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 10 Nov 2020 4:44 PM IST (Updated: 10 Nov 2020 4:44 PM IST)
t-max-icont-min-icon

அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, 

வேல் யாத்திரையை தடுக்க கூடாது என்றும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் தமிழக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக போலீசாரிடம் விளக்கம் அளிக்குமாறு கூறி அந்த விசாரணையை இன்று ஒத்திவைத்தது.

அதைதொடர்ந்து பாஜகவின் வேல் யாத்திரை தொடர்பாக டிஜிபி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜகவினர் பின்பற்றவில்லை. அது வெறும் காகித அளவிலேயே உள்ளது. பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றவில்லை. பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? என்றும், அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

Next Story