விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் காய்ச்சல் முகாமில் பயன் அடைந்துள்ளனர் - முதலமைச்சர் பழனிசாமி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார்.
விருதுநகர்,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். அங்கு ரூ.11.36 கோடி மதிப்பிலான 15 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.28.74 கோடியில் 30 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பினான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “விருதுநகரில் சுமார் 4 லட்சம் பேர் காய்ச்சல் முகாமில் பயன் அடைந்துள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது. விருதுநகரில் தினமும் 103 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story