நவம்பர் 11: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மேலும் 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,50,409 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,20,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,210 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 11,415 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 571 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 2,06,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 76,572 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,05,08,886 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,07,86,565 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 77,309 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 207 மையங்களில் (அரசு - 66, தனியார் - 141) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 18,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,53,158 பேர் ஆண்கள், அதில் இன்று மட்டும் 1,350 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,97,218 பேர் பெண்கள், அதில் இன்று மட்டும் 834 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:-
Related Tags :
Next Story