நவம்பர் 12: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,52,521 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,22,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,347 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 11,440 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 565 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 2,07,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 76,574 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,05,85,460 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,08,63,921 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 77,356 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 208 மையங்களில் (அரசு - 66, தனியார் - 142) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 18,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,54,454 பேர் ஆண்கள், அதில் இன்று மட்டும் 1,296 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,98,034 பேர் பெண்கள், அதில் இன்று மட்டும் 816 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:-
Related Tags :
Next Story