தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 5:15 AM IST (Updated: 13 Nov 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா ஊரடங்கால், பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலத்தில் கூடுதலாகவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல, அதிகளவில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளதால், காத்திருப்போர் பட்டியலும் நீண்டு உள்ளது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில் சேவைகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண்: 06181) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகளும், எழும்பூர்-கொல்லம் (06063) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில்(06063) சிறப்பு ரெயிலில், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர்(02633/02634) சிறப்பு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியும் ஒரு இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எழும்பூர்- தூத்துக்குடி-எழும்பூர் (02693/02694) சிறப்பு ரெயில், எழும்பூர்-நெல்லை(02631) சிறப்பு ரெயில், எழும்பூர்-செங்கோட்டை(02661) சிறப்பு ரெயில் மற்றும் தஞ்சாவூர்-எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்களில் தலா பெட்டியும், எழும்பூர்-காரைக்குடி(02605) சிறப்பு ரெயிலில் ஒரு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story