மழை காரணமாக பட்டாசு விற்பனை கடும் சரிவு - வியாபாரிகள் கவலை
தொடர்மழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாக வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவுத்திடல் உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பலசரக்குக் கடைகளிலும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை தீவுத்திடலில் கடந்த ஆண்டு 80 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா மற்றும் மழைகாரணமாக 40 கடைகள் மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாக வியபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்தநிலையில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள்வேலையிழப்பு, வருவாய் இழப்பால் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
பொதுவாக தீபாவளி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒரு வாரத்திற்கு முன்னரே பட்டாசு விற்பனை சூடுபிடித்து விடும் நடப்பாண்டில் கொரோனா, மக்களிடம் வருவாய் இழப்பு, ஒருபக்கம் மழை போன்றவை தீபாவளி வியாபாரம் களைஇழந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story