கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் அடைபட்டிருந்த மக்கள் தீபாவளி கொண்டாட்டதால் உற்சாகம்


கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் அடைபட்டிருந்த மக்கள் தீபாவளி கொண்டாட்டதால் உற்சாகம்
x
தினத்தந்தி 14 Nov 2020 12:46 PM IST (Updated: 14 Nov 2020 12:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் அடைபட்டிருந்த தீபாவளி கொண்டாட்டத்தால் புத்துணர்ச்சி பெற்று உள்ளனர்.

சென்னை

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் அடைபட்டிருந்த மக்கள் தீபாவளி  கொண்டாட்டத்தால் புத்துணர்வு பெற்றுள்ளனர். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரிலும், தொலைபேசியிலும், இணையதள வாயிலாகவும் தீபாவளி வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தலைதீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். 

கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டும், அறுசுவை உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை உறவினருக்கும் அண்டை வீட்டாருக்கும் வழங்கிப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள கோவில்களில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
 
நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அங்குள்ள 18 உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு  பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதணை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். 

தீபாவளி பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஏகம்பரநாதர் உடன் ஏலவார்குழலியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா தொற்று காரணமாக குறைந்தளவு பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 


Next Story