மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
அவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 தீயணப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த கல்யாணகுமார், சின்னகருப்பு ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, காயமடைந்த வீரர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story