நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் அளவிற்கும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story