குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம் - மு.க.ஸ்டாலின் டுவீட்


குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம் - மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 14 Nov 2020 4:26 PM IST (Updated: 14 Nov 2020 4:26 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ம் நாள், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.  இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நலனை உள்ளடக்கிய தேசநலனில் அக்கறை செலுத்திய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். 

குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம்! அனைவர்க்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எட்டி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என பதிவிட்டுள்ளார்.

Next Story