மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல்


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2020 12:24 PM IST (Updated: 15 Nov 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி மாலை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக இன்று மாலை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிப்பது, கட்சி சார்பில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை என்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சில அரசியல் கட்சித் தலைவர்களை அமித்ஷா சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வேல் யாத்திரையை தொடர்வோம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தாலும், வேல் யாத்திரையில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story