கன மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது


கன மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 15 Nov 2020 2:20 PM IST (Updated: 15 Nov 2020 2:20 PM IST)
t-max-icont-min-icon

எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது செம்பரம்பாக்கம் ஏரி.

தற்போது நீர்மட்டம் 20 அடியை தாண்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் ஏரிப்பகுதிக்கு செல்லாத வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story