சென்னையில் கடந்த தீபாவளியை விட இந்த ஆண்டு காற்று - ஒலி மாசு குறைவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 15 Nov 2020 3:58 PM IST (Updated: 15 Nov 2020 4:36 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளியைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று, ஒலி மாசு குறைந்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காற்று மாசு பிரச்சினை ஏற்படும் என்பதால்  பட்டாசு வெடிக்க சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு கடந்த தீபாவளியைக் காட்டிலும் நடப்பு ஆண்டு தீபாவளியில் குறைந்துள்ளது.  இதுதொடர்பாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

’சென்னையில் கடந்த தீபாவளியை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்துள்ளது. அதேபோல்,  ஒலி மாசு 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளது என்றும், சென்னை திருவல்லிக்கேணியில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 97-லிருந்து 107-ஆக அதிகரித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story