புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையா? மு.க.அழகிரி விளக்கம்


புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையா? மு.க.அழகிரி விளக்கம்
x
தினத்தந்தி 15 Nov 2020 8:03 PM IST (Updated: 15 Nov 2020 8:03 PM IST)
t-max-icont-min-icon

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை. 

எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது.

தற்போது திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இறப்பிற்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story