ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை


ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை
x
தினத்தந்தி 16 Nov 2020 9:56 PM IST (Updated: 16 Nov 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கிராமப் புறங்களில் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

ரூ.12000 ஊதியத்தை ரூ.14,000 உயர்த்தப்பட்டுள்ளது . இதன் மூலம் 1843 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story