தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்
x
தினத்தந்தி 17 Nov 2020 12:46 PM IST (Updated: 17 Nov 2020 12:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது அதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று ஒருவருக்கு கூட கொரோனா உறுதியாகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story