தமிழகத்தில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,652- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,652- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568- ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து ஒரு நாளில் 2,314 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 970- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 18- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,513- ஆக உள்ளது.
Related Tags :
Next Story