மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 3:51 AM GMT (Updated: 19 Nov 2020 3:51 AM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,861 கன அடியில் இருந்து 11,361 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,861 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,861 கன அடியில் இருந்து 11,361 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.15 அடியாகவும், நீர் இருப்பு 59.96 டிஎம்சியாகவும் உள்ளது.

டெல்டா பாசனத்தேவைக்காக 1,500  கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால், அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.


Next Story