தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடி மாற்றம்


தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 19 Nov 2020 12:38 PM GMT (Updated: 19 Nov 2020 12:38 PM GMT)

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, 

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை கடந்த 16 ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் கலந்தாய்வானது நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் ரூ. 3.85 லட்சம் முதல், ரூ. 4 லட்சம் வரை கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்ததுள்ளது. 

ஆனால் தமிழக அரசு ஒரு கல்லூரிக்கான கட்டணத்தை அதிகபட்சமாக ரூ. 4.15 லட்சமாக நிர்ணயித்துள்ளது. சில கல்லூரிகளுக்கான கட்டணங்கள் உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணய குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கும், அரசு வெளியிட்டுள்ள கட்டணங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story