திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம் தொடங்கியது


திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம் தொடங்கியது
x
தினத்தந்தி 20 Nov 2020 11:10 AM GMT (Updated: 20 Nov 2020 11:10 AM GMT)

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் 2-வது படைவீடு என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய விழாவாகிய சூரசம்ஹாரம் தற்போது துவங்கியுள்ளது. இந்த விழாவில் வழக்கமாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் கடற்கரை முகப்பில் 300க்கு 300 சதுர அடியில்  மிகக் குறைவான பக்தர்களோடு இந்த வருடம் சூரசம்ஹாரம் நிகழ்கிறது.

திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. உற்சவர் ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

Next Story