மாநில செய்திகள்

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு + "||" + DMK MLA Poongothai Aladi Aruna denies suicide bid reports

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்;  பூங்கோதை முகநூல் பதிவு
வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என பூங்கோதை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, 

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பூங்கோதை (வயது 56) உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தி.மு.க. உட்கட்சி பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பூங்கோதை மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘முகநூல்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

19-ந்தேதி அன்று காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்து என்னுடைய பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ரத்த பரிசோதனையில் என் உடலில் ரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க., ஆகவே எனக்கு மருத்துவரீதியாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 7.5% இடஒதுக்கீட்டில் திமுக எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
7.5% இடஒதுக்கீட்டில் திமுக எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது- மு.க ஸ்டாலின்
தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சிக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. "இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுக மக்களை ஏமாற்றுகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்
இணையவழி உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் திமுக அவர்களின் ஆட்களை வைத்து ஏமாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.