மாநில செய்திகள்

சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது + "||" + The medical consultation for the special unit is taking place today

சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது
சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
சென்னை,  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். வரும் 23-ம்தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.