மாநில செய்திகள்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார் + "||" + Removed from DMK, Former MP KP Ramalingam joins BJP

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைகிறார்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் கே.பி இராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். 

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி இராமலிங்கம் கருத்து தெரிவித்தார். இதனால்,  எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வர உள்ளநிலையில், அவரையும் கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திமுக, அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் - ஒ.பன்னீர்செல்வம் உறுதி
திமுக, அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
2. திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
4. கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.
5. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் - மு.க ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.