மாநில செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல் + "||" + Home Minister Amit Shah is scheduled to meet the Chief Minister and Deputy Chief Minister

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். 

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அரசு நிகழ்ச்சிக்கு பின்னர் தனியார் நட்சத்திரவிடுதியில் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.