மாநில செய்திகள்

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” - அமித்ஷா ட்வீட் + "||" + "I am always happy to be in Tamil Nadu" - Amit Shah tweeted

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” - அமித்ஷா ட்வீட்

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” - அமித்ஷா ட்வீட்
தமிழகத்தில் இருப்பது என்றும் தனக்கு மகிழ்ச்சியே என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். 

விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார். 

அங்கு சாலையின் இரு புறமும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் அமித்ஷாவை வரவேற்று கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரத்திற்கு நடந்தே சென்றார். சாலையில் உள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு அவர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். 

இதனையடுத்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்ற அமித்ஷா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கி ஓய்வெடுத்த பின்னர், இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து அமித்ஷா தங்கியுள்ள ஓட்டலுக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் அவரை நேரில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையில் தான் சென்னைக்கு வந்து சேர்ந்தது குறித்து அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.