மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் + "||" + Minister RP Udayakumar on Northeast Monsoon Precautionary Measures

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 4,713 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், பாதுகாப்பற்ற பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் சென்று தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதே போல, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய இடங்களில் 4,680 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 43,000 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர் - தீயணைப்புத்துறை இயக்குனர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார்நிலையில் உள்ளனர் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் எம்.எஸ்.ஜாபர் சேட் தெரிவித்துள்ளார்.
2. அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை: சென்னையில், விடிய விடிய கனமழை - குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடங்கியிருக்கிறது. சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
3. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" - முதலமைச்சர் பழனிசாமி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
4. வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.