மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today in Tamil Nadu 1,655 confirmed corona infections

தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,69,995 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,12,014 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 36-வது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 11 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,605 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,010 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,45,848 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 12,542 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,809 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,15,41,238 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் இன்று 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.