மாநில செய்திகள்

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது + "||" + DMK High Level Action Planning Committee Meeting

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.
சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளை இப்போதே தொடங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து கருத்து கேட்டு வருகின்றன.

அந்த வகையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட மாநில முக்கிய நிர்வாகிகள், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.

கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பிரசார வியூகம் குறித்தும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.