மாநில செய்திகள்

‘நிவர்’ புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் + "||" + Cuddalore, Pondicherry ports 7th storm warning cage lifted due to 'Nivar' storm

‘நிவர்’ புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

‘நிவர்’ புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
‘நிவர்’ புயல் காரணமாக கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, 

‘நிவர்’ புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக ‘நிவர்’ நாளை கரையைக் கடக்க உள்ளது. காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘நிவர்’ புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் விளக்கம் ஆகும் 

மேலும் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர், பின்னர் 15 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று காலை நான்கு கிலோமீட்டர் வேகத்தில் வந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கடலூர், விருத்தாசலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அரியர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கடலூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
கடலூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. கடலூர், பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா
கடலூர், பண்ருட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.