தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது


தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது
x
தினத்தந்தி 24 Nov 2020 7:09 AM GMT (Updated: 24 Nov 2020 7:48 AM GMT)

ஒரு கிராம் தங்கம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ. 37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 104 ரூபாய் குறைந்து ரூ.4,644-க்கு விற்பனை ஆகிறது.

அதே நேரம் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 குறைந்து ரூ. 64.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story