நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை; மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை


நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை; மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Nov 2020 9:46 AM GMT (Updated: 24 Nov 2020 9:46 AM GMT)

நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை பற்றி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் மற்றும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு துறைகளை முடுக்கிவிட்டுள்ளது.  இதில், துறை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிகிறார்.  தொடர்ந்து நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மூத்த அமைச்சர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story