தி.மு.க.வில் இணைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகன்


தி.மு.க.வில் இணைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகன்
x
தினத்தந்தி 24 Nov 2020 3:49 PM GMT (Updated: 24 Nov 2020 3:49 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மற்றும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகனான ராஜேந்திரகுமார், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மற்றும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகனான ராஜேந்திரகுமார், அக்கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.

இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஏ. ராஜா, நாடாளுமன்ற மேலவை எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கட்சியின் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 1989ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவரது தந்தை எஸ்.எஸ். ராஜேந்திரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு அந்த தேர்தலில் பிற தொகுதிகளுடன் ஒப்பிடும்பொழுத, அதிக வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ.வான பெருமையை பெற்றவர் ஆவார்.

Next Story