நிவர் புயலால் தொடர் மழை எதிரொலி: சென்னையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்


நிவர் புயலால் தொடர் மழை எதிரொலி: சென்னையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
x
தினத்தந்தி 24 Nov 2020 10:23 PM GMT (Updated: 24 Nov 2020 10:23 PM GMT)

நிவர் புயலால் தொடர் மழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை,

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை முதலே தொடர்ச்சியாக மழை விட்டு, விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வந்தால், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அலுவலகத்தில் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் டீம் கமாண்டர் ஸ்ரீராம் சவுத்திரி தலைமையில் தலா 19 வீரர்கள் கொண்ட 2 குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். 

தேசிய பேரிடர் மீட்பு படையினரின் தயார் நிலை குறித்து அதன் உதவி பொறுப்பாளர் அமல் குமார் கூறும்போது, “வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு 4 ரப்பர் படகுகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. மேலும், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பதற்கான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்கான கயிறுகள், அபாய எச்சரிக்கை விடுவதற்கான ஒலிபெருக்கிகள், மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அறுப்பதற்கான எந்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் எங்கள் வீரர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.

Related Tags :
Next Story