’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்


’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 24 Nov 2020 10:58 PM GMT (Updated: 24 Nov 2020 10:58 PM GMT)

நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  நிவர் புயல் தீவிர புயலாக மாறியது.  நவம்பர்  24 ஆம் தேதி 11.30 மணி நிலவரப்படி கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது. இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று  தெரிவித்துள்ளது.


Next Story