இன்று இரவு கரையை கடக்கும் “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம்


இன்று இரவு கரையை கடக்கும் “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 25 Nov 2020 1:02 AM GMT (Updated: 25 Nov 2020 1:06 AM GMT)

“நிவர்” புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

நிவர் புயல், தீவிர புயலாக உருவெடுத்தது. இதனையடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Next Story