தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் + "||" + Thundershowers Rain in 4 districts of Tamil Nadu for next 3 hours - Meteorological Department
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
புதுச்சேரி வடக்கே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறியது. புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும்.
மேலும் அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.