மாநில செய்திகள்

சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும் + "||" + The flight will start at 9 am in Chennai

சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும்

சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும்
சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.
சென்னை,

‘நிவர்’ புயல் நேற்று கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக் கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதன்படி இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தசூழலில் அதி தீவிர புயலாக இருந்த 'நிவர்', கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  

இந்நிலையில் சென்னையில் விமான சேவை இன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளது. தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது. காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். தற்போது காற்று வீசுவதால் விமான போக்குவரத்து 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
3. சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
4. சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை
சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை.
5. சென்னை, ஆவடி, ஊட்டி நிலையங்களில் உள்ள ராணுவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சென்னை, ஆவடி, ஊட்டி நிலையங்களில் உள்ள ராணுவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.