கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்


கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
x
தினத்தந்தி 26 Nov 2020 3:48 PM GMT (Updated: 26 Nov 2020 3:48 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை

தமிழகத்தில் 14-ஆவது நாளாக இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக  கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த் 24 மணி நேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,173 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 396 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 40-ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கொரோனாபாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,13,801 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 60,365 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று மேலும் 1,797 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,332 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த் 24 மணீ நேரத்தில் கொரோனா பாதிப்பில் 14 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,837 பேர் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மாவட்டங்கள்நவ. 26மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில் இறப்பு
அரியலூர்34,5444,4781848
செங்கல்பட்டு4847,23145,763757711
சென்னை3962,13,8012,05,9444,0203,837
கோயம்புத்தூர்15848,13346,849679605
கடலூர்1124,12423,76980275
தருமபுரி126,0185,83113750
திண்டுக்கல்4210,2019,91890193
ஈரோடு8412,20211,731332139
கள்ளக்குறிச்சி810,63210,46066106
காஞ்சிபுரம்4327,46226,757282423
கன்னியாகுமரி1915,61215,248113251
கரூர்124,7604,51619747
கிருஷ்ணகிரி227,3327,020200112
மதுரை3319,61518,957220438
நாகப்பட்டினம்37,5377,151262124
நாமக்கல்3310,2839,963218102
நீலகிரி347,3397,13915941
பெரம்பலூர்12,2352,212221
புதுக்கோட்டை1211,07810,818106154
ராமநாதபுரம்16,1886,01443131
ராணிப்பேட்டை1815,55615,30275179
சேலம்9329,57228,558578436
சிவகங்கை116,2686,05884126
தென்காசி108,0337,79682155
தஞ்சாவூர்2216,29515,929138228
தேனி1316,55716,33031196
திருப்பத்தூர்87,1887,0641123
திருவள்ளூர்6740,66839,477541650
திருவண்ணாமலை4318,55918,151134274
திருவாரூர்710,38710,121163103
தூத்துக்குடி1815,62215,369118135
திருநெல்வேலி1514,76514,429127209
திருப்பூர்7115,11514,293615207
திருச்சி2713,32413,016136172
வேலூர்3219,20118,709162330
விழுப்புரம்1114,54314,311122110
விருதுநகர்2215,84115,54966226
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்092692231
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)1999982161
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்042842800
மொத்தம்1,4647,76,1747,53,33211,17311,669



Next Story