மாநில செய்திகள்

சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு + "||" + Impact of 'Nivar' storm in Chennai: Public impact due to accumulated rain water on the roads

சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு

சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு
‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது.
சென்னை

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி சாலையில் இடுப்பளவு தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் அப்பகுதியினரை படத்தில் காணலாம்.சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள போஸ்டல் காலனி பகுதியில் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை படத்தில் காணலாம்.சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அண்ணா பிரதான சலையில் நேற்று பெய்த மழையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம்.சென்னையே கனமழையில் தத்தளித்த போதும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் எதிர் பார்த்த அளவு தண்ணீர் நிரம்பாமல் இருப்பதை படத்தில் காணலாம்.தொடர் மழையால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவில் தெப்பகுளம் நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.கனமழையின் காரணமாக முடிச்சூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.திருவொற்றியூர் ராஜாஜி நகர் முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.மேற்கு தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்.தாம்பரம் கிஷ்கிந்தா ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி.தாம்பரம் வரதராஜபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த குடியிருப்புவாசிகளை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு வந்த காட்சி.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
2. சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
4. சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
5. சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை
சென்னை, செங்கல்பட்டை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை.