2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு


2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 11:08 PM GMT (Updated: 27 Nov 2020 11:08 PM GMT)

2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2021-ம் ஜனவரி 1-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ந்தேதியும், புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 2-ந்தேதியும், ஏப்ரல் 13-ந்தேதி வரும் தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 14-ந்தேதி வரும் தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு ஏப்ரல் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும், ரம்ஜானை முன்னிட்டு மே 14-ந்தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 21-ந்தேதியும், மொகரத்தை முன்னிட்டு ஆகஸ்டு 20-ந்தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 30-ந்தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10-ந்தேதியும், ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 14-ந்தேதி மற்றும் 15-ந்தேதியும், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 19-ந்தேதியும், நவம்பர் 4-ந்தேதி வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் விடுமுறை விடப்படுகிறது. இதுதவிர உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம் (மே 1-ந்தேதி), சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

மே 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையும் விடப்படுகிறது.

கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஜனவரி 23-ந்தேதி, மார்ச் 6-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஜூன் 5-ந்தேதி, ஜூலை 3-ந்தேதி, ஆகஸ்டு 7-ந்தேதி, செப்டம்பர் 4-ந்தேதி, அக்டோபர் 23-ந்தேதி, நவம்பர் 20-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி ஆகிய தேதிகளில் வரும் 10 சனிக்கிழமைகளில் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் செயல்படும். இதைதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றன.

Next Story