லண்டனில் இருந்து மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள், கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை


லண்டனில் இருந்து மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள், கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 28 Nov 2020 7:29 PM GMT (Updated: 28 Nov 2020 7:29 PM GMT)

42 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 3 சாமி சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டு கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சாமி சிலைகள் திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஆனால் திருடப்பட்ட சிலைகளை மீட்க முடியவில்லை. அந்த சிலைகள் லண்டனுக்கு கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், 42 ஆண்டுகளுக்கு பின்னர் 3 சாமி சிலைகளும் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் மீட்கப்பட்டன. பின்னர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த சிலைகள் பல்வேறு நடைமுறைகளுக்கு பின்னர் சமீபத்தில் டெல்லி கொண்டு வரப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 20-ந் தேதி சென்னையில் அந்த சாமி சிலைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனந்தமங்கலம் கோவில் நிர்வாக அதிகாரி சங்கரேஸ்வரியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து 3 சிலைகளும் கடந்த 21-ந் தேதி அனந்தமங்கலம் கொண்டு வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் செய்து, 3 சாமி சிலைகளும் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

Next Story