தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்


தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2020 9:21 PM GMT (Updated: 28 Nov 2020 9:21 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உருவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை இல்லை. பண் டிகை காலத்திலும் கொரோனா அதிகரிக்கவில்லை. பாதிப்பு குறைந்தே வருகிறது. ஆனால் பனி, மழை, பண்டிகை காலம் கொரோனாவை கையாளுவதில் சவாலாக இருக்கிறது.

ஆரோக்கியமானவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையில் இதுவரை எந்த புகாரும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story