தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல் + "||" + Job creation for 74,212 youth in Tamil Nadu - Edappadi Palanisamy Information
தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா காலத்தில் ஒப்பந்தம் செய்த 55 புதிய திட்டங்களால் தமிழகத்தில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
“சோதனை மிகுந்த கொரோனா காலத்தில் கூட தமிழகத்தில் 55 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலமாக ரூ.40 ஆயிரத்து 718 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, 74 ஆயிரத்து 212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
கங்கை கொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர்.