மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு


மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு
x
தினத்தந்தி 30 Nov 2020 6:46 AM GMT (Updated: 2020-11-30T12:16:46+05:30)

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனையின் போது, என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று அதிருப்தியை வெளியிட்ட ரஜினிகாந்த், ''என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது எனவும் கூறியதாக செய்திகள் வெளியாகின. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை தற்போது முடிந்துள்ளது. 

Next Story