பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 1 Dec 2020 3:38 AM GMT (Updated: 1 Dec 2020 3:38 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

அந்த வகையில், சென்னையில், நேற்று பெட்ரோல், லிட்டர் 85.31 ரூபாய், டீசல் லிட்டர் 77.84 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர். 85.31 ரூபாயாகவும், டீசல் விலையில் மாற்றமின்றி 77.84 ரூபாயாகவும் உள்ளன. 

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. 


Next Story