சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்


சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2020 5:00 AM IST (Updated: 2 Dec 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து நாகர்கோவில், மன்னார்குடி, ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-மன்னார்குடி (வண்டி எண்: 06179) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக மன்னார்குடி-எழும்பூர் (06180) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் இரவு 10.30 மணிக்கு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (02695) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மதியம் 3.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02696) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-மங்களூர் (02685) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மங்களூர்- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02686) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 4.35 மணிக்கு மங்களூரில் இருந்தும் இயக்கப்படும்.

* எழும்பூர்-நாகர்கோவில் (06063) இடையே சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் மாலை 6.55 மணிக்கு எழும்பூரில் இருந்தும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படும்.

* எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 8.25 மணிக்கு எழும்பூரில் இருந்தும், மறுமார்க்கமாக குருவாயூர்-எழும்பூர் (06128) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் இரவு 9.30 மணிக்கு குருவாயூரில் இருந்தும் இயக்கப்படும்.

* எழும்பூர்-ராமேசுவரம் (06852) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 7.15 மணிக்கு எழும்பூரில் இருந்தும், மறுமார்க்கமாக ராமேசுவரம்-எழும்பூர் (06852) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.10 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்தும் இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-பாலக்காடு (02651) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கும், மறுமார்க்கமாக பாலக்காடு -எம்.ஜி.ஆர். சென்டிரல் (02652) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் பாலக்காடில் இருந்து மதியம் 3.35 மணிக்கும் இயக்கப்படும்.

* கோவை-நாகர்கோவில் (02668) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 7.30 மணிக்கு கோவையில் இருந்தும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-கோவை (02667) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படும்.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை இன்று (புதன்கிழமை) முதல் காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்ட்டர்களில் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story