“ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன்” ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பு
தஞ்சாவூரில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று டுவிட்டரில் பதிவிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனது அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று டுவிட்டரில் பதிவிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் சத்தியமூர்த்தி (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், ரஜினி மக்கள் மன்ற பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவரை தொடர்பு கொண்டு அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட கோரிக்கை விடுத்தனர். உடனே மன உளைச்சல் காரணமாக இந்த பதிவினை போட்டு விட்டேன் என்று மறுபதிவிட்டார்.
“ரஜினி அரசியலுக்கு வருவாரோ? மாட்டாரோ? என்ற நிலையில் தான் அந்த பதிவினை போட்டேன். மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் என்னை தொடர்பு கொண்டு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்” என கூறியதையடுத்து அந்த பதிவினை நீக்கி விட்டேன்” என்றார். சத்தியமூர்த்திக்கு தேவி என்ற மனைவியும். பரணிதரன், இனியவன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story