மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை + "||" + Cyclonic Storm ‘Burevi’ over southwest Bay of Bengal (Cyclone Alert for South Tamilnadu and South Kerala coasts

தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்  - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,

வங்க கடலில் கடந்த 24-ந்தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  உள்ளது. குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். 

புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். வட தமிழகத்தில் 4 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிகமான இந்த மழைப்பொழிவுக்கு ‘அம்பான், நிவர்’ போன்ற புயல்கள் தான் முக்கிய காரணம் ஆகும்.
2. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை மையம்
வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.
3. வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
4. அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும்; வானிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு
அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
5. தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.