ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும் - தமிழருவி மணியன் பேட்டி


ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும் - தமிழருவி மணியன் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2020 8:25 AM GMT (Updated: 2020-12-02T15:49:15+05:30)

ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனது அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றார். இதனால், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்தார். ரஜினி உடனான  சந்திப்புக்கு பின் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரஜினி உடனான சந்திப்பு வழக்கமானது. அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்படுத்துவார்.  ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும்.   

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது அவருக்குதான் தெரியும். உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன் என்றார். 

Next Story